மேகா இன்ஜினியரிங் நிறுவனம் மீது சிபிஐ வழக்குப்பதிவு
தேர்தல் நன்கொடை பத்திரங்களை அதிகளவில் வாங்கிய நிறுவனங்களில் ஒன்றான மேகா இன்ஜினியரிங் நிறுவனம் மீது அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாக சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது.
மேகா இன்ஜினியரிங் நிறுவனம் தேர்தல் பத்திரங்கள் மூலம் பாஜகவுக்கு 586 கோடி ரூபாய் நிதி வழங்கியிருந்தது. ஐதராபாத்தை தலைமையிடமாகக் கொண்ட இந்த நிறுவனம் , பிஆர்எஸ் கட்சிக்கு 195 கோடி ரூபாயையும், திமுகவுக்கு 85 கோடி ரூபாயையும் தேர்தல் பத்திரம் மூலம் நன்கொடையாக அளித்திருந்தது.
குறிப்பிட்ட இந்த நிறுவனம் ஒருங்கிணைந்த ஜகதால்பூர் உருக்கு ஆலைப் பணிகளை மேற்கொண்டதில், 174 கோடி நிதி ஒதுக்க அதிகாரிகளுக்கு 78 லட்சம் ரூபாய் லஞ்சம் கைமாறியதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக NISP, NMDC Ltd ஆகிய நிறுவனங்களைச் சேர்ந்த 8 ஊழியர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்த வழக்கில் உருக்கு அமைச்சக அதிகாரிகளிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதனிடையே, 315 கோடி ரூபாய் லஞ்சம் கைமாறியதாக கடந்த ஆண்டு ஆகஸ்ட் 10-ஆம் தேதி நடத்திய முதல்கட்ட விசாரணையின் அடிப்படையில் தற்போது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலதிக செய்திகள்
மும்பைக்கு எதிரான ஐ.பி.எல்., லீக் போட்டியில் சென்னை அணி 20 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.