கடவுள் சக்தியால் நோயை குணப்படுத்தச் சென்ற ஆசிரியை மரணம்!

ஆசிரியயை ஒருவர் , யாழ். இளவாலை முல்லனை பிரதேசத்தில் உள்ள தேவாலயமொன்றுக்கு தீராத நோய்க்கு தெய்வீக சிகிச்சை பெறச் சென்ற போது திடீர் சுகவீனம் ஏற்பட்டு நேற்று முன்தினம் (14) உயிரிழந்துள்ளார்.
38 வயதான கல்பனா கோவிந்தசாமி என்ற ஆசிரியை, வயிற்றில் ஏற்பட்ட நோய்க்காக யாழ்ப்பாணம் தெல்லிப்பளை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நோய் குணமாகாததால், கடவுளின் சக்தியால் தனது நோயைக் குணப்படுத்தும் தேவாலயத்திற்குச் சென்றுள்ளார்.
அங்கு குறித்த பெண்ணை சில நாட்கள் தேவாலயத்தில் வைத்து சிகிச்சை கொடுத்து வந்த நிலையில் , அவரது உடல்நிலை மோசமடைந்ததையடுத்து , அவர் தேவாலயத்திலிருந்து தெலிப்பளை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை பெற்று வந்த பெண் அங்கு உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் இளவாலை பிரதேசவாசிகள் , தேவாலயத்தின் பாதுகாவலரை உடனடியாக கைது செய்யுமாறு பொலிஸாரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர், ஆனால் உயிரிழந்த ஆசிரியையின் பிரேத பரிசோதனை முடிவு மற்றும் காரணத்தை தெரிவிக்கும் வரை எவரையும் கைது செய்ய முடியாது என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இச்சம்பவம் தொடர்பான விசாரணைகளை இளவாலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்