மக்களவை தேர்தலை புறக்கணிப்பேன்; அதிமுக வேட்பாளர் அறிவிப்பால் பரபரப்பு
புதுச்சேரியில் பாஜகவும் காங்கிரஸும் மாறிமாறி வாக்களர்களுக்கு பணம் கொடுப்பதாக அம்மாநிலத்தின் அதிமுக வேட்பாளர் தமிழ்வேந்தன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
புதுச்சேரி மக்களவைத் தொகுதிக்கான வாக்குப்பதிவு நாளை மறுநாள் (ஏப்.19) நடைபெறுகிறது. இன்று மாலையுடன் பரப்புரை நிறைவடைதால் அரசியல் தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இதனிடையே, புதுச்சேரி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட இடங்களில் பணம் பட்டுவாடா தாராளமாக நடப்பதாக குற்றஞ்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் தமிழ்வேந்தன், பாஜகவும் காங்கிரஸும் வாக்காளர்களுக்கு பணத்தை வாரி இறைப்பதாகக் கூறினார். பாஜகவினர் 500 ரூபாயும், காங்கிரஸ் கட்சியினர் 200 ரூபாயும் வாக்காளர்களுக்கு கொடுப்பதாக குற்றம்சாட்டினார்.
ஓட்டுக்கு பணம் கொடுப்பதால் இந்த தேர்தலில் நம்பிக்கை இல்லை என்றும் புதுச்சேரியில் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்றும் தமிழ்வேந்தன் வலியுறுத்தியுள்ளார். பாஜகவும், காங்கிரசும் ஓட்டுக்கு பணம் கொடுப்பதால் தேர்தலை புறக்கணிக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலதிக செய்திகள்
சர்வோதய இயக்கத்தின் ஸ்தாபகர் ஆரியரத்ன அவர்களது இறுதிக் கிரியைகள் சனிக்கிழமை
1900 ரூபாவுக்கு கொத்து ரொட்டி வேண்டாம் : வெளிநாட்டவரை துரத்திய ரவுடி வியாபாரி கைது…
தமிழகத்தில் இன்றுடன் ஓய்கிறது தேர்தல் பரப்புரை
ரூ.500க்கு கேஸ் சிலிண்டர்; இல்லத்தரசிகளுக்கு நற்செய்தி – முக்கிய அறிவிப்பு!
அரசியல் தலைவர்களின் பதிவுகளை நீக்க எக்ஸுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு!
சஜித் கட்சியின் எம்.பிக்களை வளைக்கும் ரணிலின் முயற்சி வெற்றியளிக்கவில்லை.
குழந்தையின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி நகை, மோட்டார் சைக்கிள் கொள்ளை.
செண்பகம் அறக்கட்டளையின் நிரந்தர அபிவிருத்திப்பணி.
பட்லர் சதம் கைகொடுக்க, ராஜஸ்தான் அணி 2 விக்கெட்டில் ‘திரில்’ வெற்றி.
ஐக்கிய அரபு எமிரேட்சில் பெய்த கனமழை காரணமாக சென்னையில் இருந்து 5 விமானங்கள் ரத்து.
ஓட்டு சேகரிப்பின் போது, பெற்றோரின் பிள்ளைகள் வளர்ப்பு குறித்து அண்ணாமலை பேசும் போது கண் கலங்கினார்.
பாலைவனத்தில் வெள்ளம்… துபாய் விமான நிலையமும் வெள்ளத்தில் முடங்கியது! (வீடியோ)