பிரச்சாரத்தின் போது மன்சூர் அலிகானுக்கு ஏற்பட்ட உடல் நலக்குறைவு.
நாடாளுமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி தமிழகத்தில் நடக்க உள்ளது. இதில் திமுக, அதிமுக, பாஜக என மும்முனை போட்டி நிலவி வருகிறது. அதிலும் குறிப்பாக பாஜக கண்டிப்பாக தமிழ்நாட்டில் கால் பதிக்க வேண்டும் என கடுமையாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்கள்.
இந்நிலையில் மன்சூர் அலிகான் இந்திய ஜனநாயக புலிகள் கட்சி தொடங்கியிருந்தார். தேர்தலின் போது மஞ்சூர் அலிகானின் வித்தியாசமான பிரச்சாரம் ரசிகர்களை சிரிக்க வைத்திருக்கிறது.
அவருக்கு தேர்தல் ஆணையம் பலாப்பழம் சின்னம் ஒதுக்கி உள்ளது. இன்றுடன் தேர்தல் பிரச்சாரம் முடிவடையும் நிலையில் வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரத்தில் இறங்கி இருக்கின்றனர்.
அதன்படி மன்சூர் அலிகானும் தனது தொகுதியில் பிரச்சாரம் செய்து கொண்டிருந்தார். ஆனால் திடீரென அவரது உடல் நிலையில் பிரச்சனை ஏற்பட்டிருந்தது. இதன் காரணமாக குடியாத்தம் நகரில் உள்ள மருத்துவமனையில் மஞ்சூர் அலிகான் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும் கடந்த சில நாட்களாக தீவிரமாக பிரச்சாரம் செய்ததால் உடல் நிலையில் சிறிய பிரச்சனை ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். தேர்தல் நெருங்கும் நேரத்தில் மன்சூர் அலி கானுக்கு இவ்வாறு ஏற்பட்டது அவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.