விருந்துபசாரத்தில் மனைவியை வெட்டிப் படுகொலை செய்த கணவன்!

தனது மனைவியைக் கணவர் கூரிய ஆயுதத்தால் வெட்டிப் படுகொலை செய்துள்ளார்.
இந்தக் கொடூர சம்பவம் மாத்தளை, எல்கடுவ பகுதியில் நேற்று இடம்பெற்றுள்ளது.
வீட்டில் இடம்பெற்ற விருந்துபசாரத்தின்போதே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இரண்டு பிள்ளைகளின் தாயாரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவத்தின் பின்னர் உயிரிழந்த பெண்ணின் கணவனை, ஊர் மக்கள் பிடித்துப் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.