எடப்பாடி பழனிசாமி மீது திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் வழக்கு…!
மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணி சார்பில் மத்திய சென்னை தொகுதி தேமுதிக வேட்பாளர் பார்த்தசாரதியை ஆதரித்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், மத்திய சென்னை திமுக சார்பில் போட்டியிடும் தயாநிதி மாறன், அவருடைய நாடாளுமன்ற மேம்பாட்டு உறுப்பினர் நிதியில் 75 சதவீதத்தை செலவு செய்யவே இல்லை எனக் குற்றஞ்சாட்டியிருந்தார்.
அதற்கு எதிர்வினையாற்றிய தயாநிதி மாறன், தன் மீதான அவதூறு பேச்சுக்கு எடப்பாடி பழனிசாமி உடனடியாக மன்னிப்புக் கோர வேண்டும் என்றும் ஆதாரமற்ற குற்றச்சாட்டை முன்வைத்துள்ள அவர் பொதுவெளியில் மக்களிடத்தில் மன்னிப்பு கோராவிட்டால் வழக்கு தொடர இருப்பதாகவும் கூறியிருந்தார்.
இந்த நிலையில், சென்னை எழும்பூரில் உள்ள பெருநகர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக மத்தியசென்னை வேட்பாளர் தயாநிதி மாறன் கிரிமினல் அவதூறு வழக்கு தாக்கல் செய்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மத்தியசென்னை தொகுதி மேம்பாட்டுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் இருந்து 95 சதவிகித்திற்கு மேல் செலவு செய்திருப்பதாகக் கூறினார். தனது தொகுதிக்கு ஒதுக்கப்பட்ட 17 கோடி ரூபாயில், மீதமுள்ளது 17 லட்சம் ரூபாய்தான் என்றும் அத்தனையும் மத்தியசென்னை தொகுதி வளர்ச்சிக்காக செலவு செய்திருப்பதாக தெரிவித்துள்ளார்.
மேலதிக செய்திகள்
விருந்துபசாரத்தில் மனைவியை வெட்டிப் படுகொலை செய்த கணவன்!
மலையக மக்கள் சஜித்தின் பக்கமே – அடித்துக் கூறுகின்றார் டிலான்.
12 வயது சிறுவன் வெட்டிக்கொலை! – தந்தை படுகாயம்.
ஹெரோயின், ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞர் ஒருவர் சிக்கினார்!
போதைப் பொருளுடன் சிக்கிய முன்னாள் இராணுவ மேஜர்.
தனியார் சிசிடிவி அமைப்புகள் போலீஸ் சிசிடிவி அமைப்பில் ஒருங்கிணைக்கப்பட உள்ளன.
உடலுறுப்பு இயக்க பிறவி குறைபாடுள்ள கேரள பெண்: குடிமைப் பணித் தோ்வில் தோ்ச்சி !
போதமலைக்கு தலைச்சுமையாக கொண்டு செல்லப்பட்ட வாக்கு எந்திரங்கள்!