செவ்வாய் கிரகத்திற்கு செல்லும் இலங்கை பெண் விஞ்ஞானி
செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக புதிய ஆய்வு பணியாளர் குழுவொன்று தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும் , இந்த ஆய்வு பணியாளர்களில் ஒருவராக இலங்கை விஞ்ஞானி பியூமி விஜேசேகர தெரிவு செய்யப்பட்டுள்ளார் எனவும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ஹூஸ்டனில் உள்ள விண்வெளி நிலையத்தில் நாசாவால் கட்டப்பட்ட செவ்வாய் கிரகத்தின் சுற்றுச்சூழல் பண்புகள் கொண்ட வாழ்விடம் தொடர்பாக இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இந்த நடவடிக்கையில் பங்கேற்பதற்காக நான்கு தன்னார்வலர்களைக் கொண்ட புதிய குழுவினர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்த பணியில் ஈடுபட்டுள்ள மற்ற விஞ்ஞானிகளில் ஜேசன் லீ, ஸ்டெபானி நவரோ மற்றும் ஷெரீப் அல் ரொமைதி ஆகியோர் அடங்குவர்.
பியுமி விஜேசேகர கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் உயிரியல் பொறியியலில் இளங்கலை பட்டமும், உயிரியல் மருத்துவ பொறியியலில் முதுகலை மற்றும் முனைவர் பட்டமும் பெற்றுள்ளார்.
தற்போது நாசா அமெஸ் ஆராய்ச்சி மையத்தில் முதுகலை ஆய்வாளராக உள்ளார்.
நான்கு விஞ்ஞானிகளும் மே 10 ஆம் தேதி செவ்வாய் கிரகத்திற்குள் நுழைவார்கள் என்றும் நாற்பத்தைந்து நாட்கள் அங்கு தங்குவார்கள் என்றும் கூறப்படுகிறது.