சுயதொழில் செய்பவர்களுக்கும் இனி ஓய்வூதியம்!

சுயதொழில் செய்பவர்களுக்கும் ஓய்வூதியம் (pension) வழங்கப்படும் என சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அனுப பாஸ்குவல் தெரிவித்துள்ளார்.
இந்த வேலைத்திட்டம் ஏற்கனவே நிதியமைச்சகத்திடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
சுயதொழில் செய்பவர்களுக்கு ஓய்வூதியம் தயாரிக்கப்படும் எனவும், திமை இருந்தும் சான்றிதழ் இல்லாத தொழிலாளர்களுக்கு குறுகிய கால பயிற்சி மற்றும் பரீட்சை மூலம் சான்றிதழ்கள் வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி 12 இலட்சம் பேருக்கு சமூக வலுவூட்டல் அளிக்க தமது அமைச்சு திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.