அதிக விலைக்கு வடையும் பிளேன் டீயும் விற்பனை செய்தவரும் கைது
களுத்துறையில் உள்ள உணவகம் ஒன்றில் உளுந்து வடை மற்றும் தேநீர் கோப்பையை அதிக விலைக்கு விற்பனை செய்த நபர் மொரகல்ல சுற்றுலாப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
60 வயதான இவர் களுத்துறை மாகாணத்தை சேர்ந்தவர் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
குறித்த சந்தேக நபர் கடையின் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த நபர் எனவும், கடைக்கு வரும் வெளிநாட்டினரை ஏமாற்றி பணம் பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அவர் நாளை (19) களுத்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஊடகங்களுக்கு ,
“அந்த நேரத்தில் ஒரு விருந்தாளியாக அவர் வந்தார்.. நிஜமாவே எனக்கும் பசியாக இருந்தது. அந்த நேரத்துல் கையில் காசு இல்ல.. அந்த நேரத்துல் நானும் ஒரு டீயும் , வடையும் சாப்பிட அப்படி பண்ணினேன்.. அது பெரிய விஷயமில்லை. ” என தெரிவித்துள்ளார்.
1 வடை , 1 தேனீர் (பிளேன்டீ) , 3 டாலரா? (800 ரூபா) : திகைத்து போன வெள்ளைக்காரர் (வீடியோ)
இதேவேளை,விலையை குறிப்பிடாமல் , பில் கொடுக்காமல், வாடிக்கையாளர்களை ஏமாற்றிய குற்றச்சாட்டின் கீழ் குறித்த கடையின் உரிமையாளருக்கு எதிராகவும் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
இதன்படி, நாளை (19) களுத்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு கடையின் உரிமையாளருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.