நிறைவேற்று அதிகாரம் தொடர வேண்டும்; ஜனாதிபதித் தேர்தலில் ரணிலுக்கே ஆதரவு.

நாட்டின் தற்போதைய முறைமைக்கமைய நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை அவசியம் என்று இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தெரிவித்தார். அத்துடன், ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவுக்கே தனது ஆதரவு என்றும் அவர் கூறினார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“இந்த நாட்டை மீட்கக் கூடிய ஒருவருக்கே ஜனாதிபதித் தேர்தலில் ஆதரவு வழங்கப்படும். அதனை ரணில் விக்கிரமசிங்க செய்து வருகின்றார். எனவே, அவருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். மக்கள் ஆணையுடன் அவர் பதவிக்கு வரவேண்டும். நாடாளுமன்ற வாக்கெடுப்பில் ஜனாதிபதி ரணிலுக்கு ஆதரவு வழங்கியமை மகிழ்ச்சியளிக்கின்றது.
அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி பக்கமே நிற்பேன். ஐக்கிய மக்கள் சக்தி அழைப்பு விடுத்தால்கூட ஏற்கப்போவதில்லை.” – என்றார்.