பெரிய கோயிலில் சித்திரை தேரோட்டம்; மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை!
தஞ்சை பெரிய கோயில் திருத்தேரோட்டத்தை ஓட்டி இன்று மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு.
தஞ்சை பெரிய கோவில் உலக பிரசித்தி பெற்ற கோவிலாகும்.வரலாறு சிறப்புமிக்க இந்த கோயிலை தஞ்சை பெருவுடையார் கோயில் என்றும் மக்கள் அழைப்பதுண்டு. இது தமிழர்களின் கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாக திகழ்வதோடு உலக பாரம்பரிய சின்னமாகவும் விளங்கி வருகிறது.
இந்நிலையில் பெரிய கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரைப் பெருவிழா விமர்சையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டு சித்திரை திருவிழா இம்மாதம் தொடக்கத்தில் கொடியேற்றத்துடன் துவங்கி, தினந்தோறும் சாமி அலங்காரம் செய்து பல்லக்கில் ஊர்வலம் நடைபெற்று வருகிறது.
இதற்கிடையில் இந்த பெருவிழாவில் மிக முக்கிய நிகழ்ச்சியான இன்று காலை தொடங்கி ராஜவீதிகளில் திருத்தேரோட்டம் நடைபெறுகிறது. இதனையொட்டி தஞ்சை மாவட்டத்திற்கு உள்ளுர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் வெளியிட்டுள்ள அறிக்கையில், தஞ்சை பெரிய கோவில் சித்திரை தேரோட்டம் திருவிழாவை முன்னிட்டு தஞ்சை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகள் மற்றும் அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் இன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலதிக செய்திகள்
இந்தியத் தேர்தலின் முதல் கட்ட வாக்களிப்பில் , வாக்கு விழுக்காடு அதிகரிப்பு
8 விக்கெட் வித்தியாசத்தில் லக்னோ அணியிடம் தோல்வியடைந்த சென்னை அணி.
இந்தோனேஷியாவில் வெடித்து சிதறும் எரிமலை.மக்கள் வீடுகளை விட்டு வெளியேற்றம்.
1 லட்சம் வாக்குகளை காணோம்; மறுபடி நடத்தனும் – அண்ணாமலை பரபர குற்றச்சாட்டு!
ஜாமீனுக்காக சிறையில் மாம்பழம், இனிப்பு சாப்பிடுகிறார் கெஜ்ரிவால் – அமலாக்கத்துறை குற்றச்சாட்டு