முதலை கடித்து முதியவர் சாவு! – வாழைச்சேனையில் சோகம்.

முதலை கடித்த நிலையில் முதியவர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது என்று வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவம் வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொண்டுகள்சேனை பகுதியில் நேற்று இடம்பெற்றுள்ளது.
காலாந்தனைப் பகுதியைச் சேர்ந்த 71 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையான நபரே முதலை கடித்து உயிரிழந்துள்ளார்.
பொன்டுகள்சேனை நீரோடையில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, முதலை கடித்து நீருக்குள் இழுத்துச் சென்றதால் அந்த நபர் மரணமடைந்துள்ளார் என்று பொலிஸாரின் விசாரணைகளின்போது தெரியவந்துள்ளது.
மரணமடைந்த நபரின் உடலை மரண விசாரணை அதிகாரி ரமேஸ் நேரில் சென்று பார்வையிட்டதுடன் வைத்திய பரிசோதனைக்காக உடலை வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்குமாறும் உத்தரவிட்டார்.