பொத்துவில் கடலில் மூழ்கி 15 வயது சிறுவன் மாயம்!

அம்பாறை, பொத்துவில் பகுதி கடலில் நீராடிய சிறுவன் ஒருவன் நீரில் மூழ்கி காணாமல்போயுள்ளார் என்று பொத்துவில் பொலிஸார் தெரிவித்தனர்.
பொத்துவில் பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுவனே இன்று இவ்வாறு காணாமல்போயுள்ளார்.
மேற்படி சிறுவன் கடலில் நீராடிக்கொண்டிருக்கும்போது திடீரென நீரில் மூழ்கி காணாமல்போயுள்ளார் என்று பொலிஸார் குறிப்பிட்டனர்.
இதையடுத்துப் பொலிஸார், கடற்படையினர், உயிர்காக்கும் பிரிவினர் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து காணாமல்போன சிறுவனைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர் என்று பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.