இலங்கையில் 40 ஆயிரம் ஆசிரியர்களுக்குப் பற்றாக்குறை!

இலங்கையில் சுமார் 40 ஆயிரம் ஆசிரியர்களுக்குப் பற்றாக்குறை நிலவுகின்றது என்று இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.
கொழும்பில் ஊடகங்களிடம் கருத்துரைக்கும்போது இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் இதனைக் கூறியுள்ளார்.
குறிப்பாக மேல், கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் ஆசிரியர் பற்றாக்குறை நிலவுகின்றது என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.