இரண்டு வருடங்களுக்குள் 1,800 வைத்தியர்கள் நாட்டை விட்டு ஓட்டம்!
கடந்த இரண்டு வருடங்களுக்குள் 1,800 வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர் என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
அந்தச் சங்கத்தின் பேச்சாளர் சமில் விஜேசிங்க இந்த விடயத்தை ஊடகங்களிடம் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த காலப்பகுதியில் சுமார் 300 இற்கும் மேற்பட்ட விசேட வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர் என்றும் அவர் கூறியுள்ளார்.
இதனைக் கட்டுப்படுத்துவதற்கு அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதேவேளை, அம்பாந்தோட்டை பொது வைத்தியசாலையில் சேவையாற்றி வந்த மூன்றாவது மயக்கவியல் வைத்திய நிபுணரும், அதிகாரிகளுக்கு அறிவிக்காமல் வெளிநாட்டுக்குச் சென்றுள்ளார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
அந்த வைத்தியசாலையின் பணிப்பாளர் இந்த விடயத்தை ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.
முன்னதாக அ ம்பாந்தோட்டை பொது வைத்தியசாலையில் சேவையாற்றிய இரண்டு மயக்கவியல் வைத்திய நிபுணர்கள் முன்னறிவிப்பின்றி வெளிநாட்டுக்குச் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.