உத்தரப்பிரதேசத்தில் பாஜக வேட்பாளர் மாரடைப்பால் மரணம் – பிரதமர் மோடி இரங்கல்
உத்தரப்பிரதேச மாநிலத்தின் மொர்தாபாத் மக்களவைத் தொகுதியின் பாஜக வேட்பாளர் குன்வர் சர்வேஸ் சிங் (Kunwar Sarvesh Singh) உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 72.
தொழிலதிபரும், மாநில பாஜக தலைவர்களில் ஒருவருமான குன்வர்சர்வேஸ் சிங், வெள்ளிக்கிழமை நடந்து முடிந்த தேர்தலில், மொர்தாபாத் தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிட்டார்.
இந்த நிலையில், தொண்டை பிரச்னை காரணமாக அறுவை சிகிச்சை செய்து கொண்ட குன்வர்சர்வேஸ் சிங், மருத்துவ பரிசோதனைக்காக எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நேற்று சென்றிருந்தார். அப்போது, திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டு அவர் உயிரிழந்தார்.
உத்தரப்பிரதேசத்தின் தகுர்த்வாரா (Thakurdwara) தொகுதியில் இருந்து பாஜக சார்பில் 4 முறை பாஜக சட்டப்பேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட குன்வர் சர்வேஸ் சிங், உடல் நலக்குறைவு காரணமாக இந்த மக்களவை தேர்தலில் பரப்புரையில் கூட பங்கேற்காமல் இருந்து வந்தார்.
இவரது மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள பிரதமர், கடைசி வரை கட்சிப் பணியிலும் சமூகப் பணியிலும் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வந்த குன்வர்சர்வேஸ் சிங் மறைவு, பாஜகவுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு என குறிப்பிட்டுள்ளார்.
மேலதிக செய்திகள்
முதலில் ஜனாதிபதித் தேர்தல்! – ரணில் உறுதி என்கிறார் வியாழேந்திரன்.
வாக்குச்சீட்டில் மொட்டுச் சின்னம் நிச்சயம் இருக்கும்! – நாமல் திட்டவட்டம்.
தமிழ்ப் பொது வேட்பாளர் முயற்சி முட்டாள்தனமானது! – அரவிந்தகுமார் கடும் எதிர்ப்பு.
இலங்கையில் 40 ஆயிரம் ஆசிரியர்களுக்குப் பற்றாக்குறை!
பொருளாதார வீழ்ச்சிக்கு ராஜபக்சக்கள் மீது பழி சுமத்தாதீர்கள்! – நாமல் கடும் சீற்றம்.
இரண்டு வருடங்களுக்குள் 1,800 வைத்தியர்கள் நாட்டை விட்டு ஓட்டம்!
வடமேல் மாகாண ஆளுநராக பதவியேற்கவுள்ளார் நஷீர்?
‘எங்களை சீண்டினால் அடுத்த அடி மிகவும் பலமாக இருக்கும்’,ஈரான் வெளியுறவு அமைச்சர்.