புஸ்ஸல்லாவையில் 24 வயது இளைஞரின் சடலம் மீட்பு!
கண்டி மாவட்டம், புஸ்ஸல்லாவை – பெரட்டாசி மேமலை பகுதியில் இளைஞர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அந்தப் பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது.
நீரோடையொன்றிலிருந்து இன்று காலை பிரதேச மக்களால் மேற்படி இளைஞரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இளைஞரின் மரணத்துக்கான காரணம் கண்டறியப்படாத நிலையில், புஸ்ஸல்லாவைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.