தியத்தலாவில் இடம்பெற்ற மோட்டார் பந்தய போட்டி விபத்தில் பலி எண்ணிக்கை அதிகரிப்பு (Video)

தியத்தலாவில் இடம்பெற்ற மோட்டார் பந்தய போட்டியின் போது இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மோட்டார் பந்தயத்தின் போது கார் ஒன்று தடம் புரண்டு பார்வையாளர் பகுதிக்கு சென்றதையடுத்து , 5 பேர் உயிரிழந்திருந்தனர்.
இந்த விபத்தில் இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தலதுவ தெரிவித்துள்ளார்.
பந்தயத்தின் போது கார் ஒன்று தடம் புரண்டதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
சுமார் 21 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
Video after the incident ?
https://www.facebook.com/share/v/42jqPXjpm8emS4sP/?mibextid=oFDknk