சிரியாவில் உள்ள அமெரிக்க ராணுவ தளம் மீது ராக்கெட் தாக்குதல்.
சிரியாவில் உள்ள ராணுவ தளம் மீது 5 ராக்கெட்களை ஏவி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஈராக் பிரதமர் முகமது அமெரிக்க அதிபர் பைடனை சந்தித்த அடுத்த நாள் இந்த தாக்குதல் சம்பவம் அரங்கேறியுள்ளது.
ஈராக்கின் ஜும்மார் நகரில் இருந்து வடகிழக்கு சிரியாவில் உள்ள அமெரிக்க ராணுவ தளத்தை நோக்கி ராக்கெட்டுகள் வீசப்பட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஈராக் பிரதமர் முகமது ஷியா அல்-சுதானி அமெரிக்காவுக்கு சென்று வெள்ளை மாளிகையில் அந்நாட்டு அதிபர் ஜோ பைடனை சந்தித்த அடுத்த நாள் இந்த தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது.
சிரியா எல்லையில் இருந்து தப்பியோடிய குற்றவாளிகளைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது என ஈராக் பாதுகாப்புப் படைகள் தெரிவித்துள்ளன. முன்னதாக சிரியாவின் டமாஸ்கஸ் நகரில் ஈரான் துணைத் தூதரகம் மீது இஸ்ரேல் ட்ரோன் தாக்குதல் நடத்தியதால், மத்திய கிழக்கில் பெரும் போர் பதற்றத்தை உருவாக்கியது.