மாலைதீவு அதிபர் மீண்டும் ஆட்சியை கைப்பற்றினார்.
மாலத்தீவு நாடாளுமன்றத் தேர்தலில் அதிபர் முகமது முய்சுவின் கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளது.
93 உறுப்பினர்களைக் கொண்ட பிரதிநிதிகள் சபையில் அவரது மக்கள் தேசிய காங்கிரஸ் 66 இடங்களில் வெற்றி பெற்றுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த வெற்றியானது, சீனாவுடன் நெருக்கமான உறவுகளை ஏற்படுத்துவதற்கான ஜனாதிபதி முயிசுவின் கொள்கைக்கு வலுவான அங்கீகாரம் என்று பலர் கருதுகின்றனர்.
சீனாவுக்கு விசுவாசமாக கருதப்படும் மாலைதீவு ஜனாதிபதி தனது நாட்டில் இந்தியாவின் நீண்டகால செல்வாக்கை குறைக்க விரும்புவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இத்தேர்தல் வெற்றியில் “அதிக பெரும்பான்மையை” பெற்றுள்ள மக்கள் தேசிய காங்கிரஸ், அரசியலமைப்பு திருத்தத்திற்கு தேவையான மூன்றில் இரண்டு பாராளுமன்றத்தின் அதிகாரத்தையும் பெற்றுக்கொள்ள முடிந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.