தியத்தலாவ விபத்து இலங்கை இராணுவம் தனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறது.
தியத்தலாவ ஃபாக்ஸ் ஹில் சுப்பர் கிராஸின் போது விபத்தினால் பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் இலங்கை இராணுவம் தனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறது.
இலங்கை இராணுவத்தின் ஊடக மற்றும் உளவியல் நடவடிக்கைகளுக்கான பணிப்பாளர் மேஜர் ஜெனரல் கே.ஏ.என்.ரசிக குமார விடுத்துள்ள அறிக்கையில் இதனைத் தெரிவித்துள்ளார்.
ஐந்து வருட மௌனத்தின் பின்னர் இலங்கை ஆட்டோமொபைல் ஸ்போர்ட்ஸ் அசோசியேஷன் மற்றும் ஸ்ரீலங்கா இராணுவ அகாடமி இணைந்து 28வது தடவையாக நடாத்திய Fox Hill Supercross போட்டி இந்த வருடம் நடைபெற்றது.
போட்டியின் 24 நிகழ்வுகளில் 14 ஆவது போட்டியாக நடைபெற்ற 1500cc Ford Laser Mazda பிரிவில் நேற்று (21) பிற்பகல் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
கார் தடம் புரண்டதால் ஏற்பட்ட இந்த விபத்தில் 7 பேர் உயிரிழந்ததுடன், 21 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும், சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டு பொலிஸ் பாதுகாப்பில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.