இஸ்ரேலிய ஆளில்லா வானூர்தியைச் சுட்டு வீழ்த்திய ஹிஸ்புல்லா.
தென்லெபனானில் இஸ்ரேலுக்குச் சொந்தமான ஆளில்லா வானூர்தியைச் சுட்டு வீழ்த்தியதாக ஈரானின் ஆதரவுடன் செயல்படும் ஹிஸ்புல்லா அமைப்பு தெரிவித்துள்ளது.
தாக்குதல் நடத்துவதற்காக அந்த இஸ்ரேலிய ஆளில்லா வானூர்தி லெபனானின் வான்வெளிக்குள் நுழைந்ததாக ஹிஸ்புல்லா கூறியது.
காஸா போர் நடக்கும் அதே வேளையில், கடந்த ஆறு மாதங்களாக இஸ்ரேலுக்கும் ஹிஸ்புல்லா அமைப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.