என்னுடைய 90 விநாடி பேச்சுக்கே காங்கிரஸ் பீதியாகி உள்ளது – பிரதமர் மோடி
இந்தியாவில் மக்களவைத் தேர்தல் 7 கட்டமாக நடைபெறும் நிலையில் தலைவர்கள் தீவிர பரப்புரையில் உள்ளனர். ராஜஸ்தானில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த பரப்புரைக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, மக்களின் சொத்துகள் மற்றும் தங்கத்தை கணக்கெடுத்து, அவற்றை நாட்டில் ஊடுருவியவர்களுக்கு பகிர்ந்தளிக்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளதாக கூறினார்.
இஸ்லாமியர்களை குறிப்பிட்டு அவர் பேசியது சர்ச்சையான நிலையில், நேற்று ராஜஸ்தானின் டோங்க் நகரில் நடந்த பரப்புரைக் கூட்டத்தில் மீண்டும் அதை சுட்டிக்காட்டி பேசினார். தனது 90 விநாடி பேச்சால் காங்கிரஸ் மற்றும் இந்தியா கூட்டணி கட்சியினர் அச்சமடைந்துள்ளதாக பிரதமர் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய பிரதமர் அரசியல் சாசனத்துடன் காங்கிரஸ் கட்சி விளையாடுவதாக குற்றம்சாட்டினார். பட்டியலின மக்களுக்கு அம்பேத்கர் அளித்த இடஒதுக்கீடு உரிமையை, வாக்கு வங்கிக்காக, இஸ்லாமியர்களுக்கு வழங்க காங்கிரஸ் விரும்புவதாகவும் கூறினார். மேலும், இடஒதுக்கீடு எப்போதும் மாற்றப்படாது எனவும், மதத்தின் அடிப்படையில் பிரிக்கப்படாது எனவும் பிரதமர் விளக்கம் அளித்தார்.
மேலதிக செய்திகள்
ஈரான் ஜனாதிபதி இன்று இலங்கை வருகை! – 5 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்து.
நாமலுக்குக் கிடைத்த பதவியால் கடும் அதிருப்தியில் பஸில் – சமல்.
பெண்ணுக்குப் போதை ஊசி செலுத்தி 10 பேர் கொண்ட கும்பல் வன்புணர்வு! – யாழில் கொடூரம்.
லக்னோ அணிக்கு எதிரான ஐ.பி.எல்., போட்டியில், சென்னை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி.
நாட்டிற்காக தனது தாய் தாலியை தியாகம் செய்தவர் – பிரதமர் மோடிக்கு பிரியங்கா காந்தி பதிலடி