உமா ஓயா திட்டம் ஈரான் ஜனாதிபதியால் திறந்து வைக்கப்பட்டது! (Video)
ஈரான் இஸ்லாமிய குடியரசின் ஜனாதிபதி கலாநிதி இப்ராஹிம் ரைசி மற்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆகியோரின் தலைமையில் உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தி திட்டம் சற்று முன்னர் திறந்து வைக்கப்பட்டது.
மகாவலி அபிவிருத்தித் திட்டத்திற்குப் பின்னர் இலங்கையில் நிர்மாணிக்கப்பட்ட பாரிய நீர்ப்பாசனத் திட்டங்களில் இத்திட்டம் ஒன்றாகும்.
ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி இலங்கை வந்துள்ள நேரம் அமெரிக்க கடற்படையினர் இலங்கையில்:…
உமா ஓயா பல்நோக்குத் திட்டத்தைத் திறந்து வைப்பதற்கு இலங்கை ஜனாதிபதி வழங்கிய அழைப்பின் அடிப்படையில் இது அமைந்தது.
ஈரான் ஜனாதிபதி பயணித்த விசேட விமானம் மத்தளை விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளதுடன் அங்கிருந்து உமாஓயாவிற்கு சென்றார்.
அதனையடுத்து, இலங்கையில் ஐந்து ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்படவுள்ளதோடு, பிற்பகல் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து அவர் இலங்கையை விட்டு புறப்பட உள்ளார்.
இதேவேளை, அமெரிக்க கடற்படையினருக்கும் இலங்கை கடற்படையினருக்கும் இடையில் கிழக்கு கடற்பரப்பில் இராணுவ ஒத்திகை நடத்தப்பட்டு வருகின்றது.
திங்கட்கிழமை ஆரம்பமான இராணுவப் பயிற்சி வெள்ளிக்கிழமை வரை தொடரும்.
ஈரான் ஜனாதிபதி இலங்கைக்கு விஜயம் செய்த போது கிழக்கு கடற்பரப்பில் இராணுவ பயிற்சி மேற்கொள்ளப்பட்டமை விசேட அம்சமாகும்.