மதியம் 2 மணிக்கு மேல் மழை வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பு.
மேற்கு, சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களில். 2 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
காலி முதல் மாத்தறை வரையிலும், ஹம்பாந்தோட்டை முதல் பொத்துவில் வரையிலும் காலை வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படலாம்.
இடியுடன் கூடிய மழையுடன் கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.