பண மோசடி குற்றச்சாட்டில் உபுல் சாந்த சன்னஸ்கல கைது…
பிரபல சிங்கள ஆசிரியரும், நாட்டில் மாற்றத்திற்காக போராடியவரும், மதச்சார்பற்ற சுதந்திர சிந்தனையாளருமான உபுல் சாந்த சன்னஸ்கல பண மோசடி குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.
திரைப்படம் ஒன்றின் தயாரிப்பின் போது ஒரு மாதத்திற்குள் 10 இலட்சம் ரூபாவை திருப்பித் தருவதாகக் கூறி ஒருவரிடம் இருந்து 10 இலட்சம் ரூபாவை பெற்றுக்கொண்ட உபுல் சாந்த சன்னஸ்கல, உறுதியளித்தபடி தொகையை அவர் திருப்பிச் செலுத்த மறுத்தமையால் , பாதிக்கப்பட்டவர் கந்தானை பொலிஸில் செய்த முறைப்பாடு செய்தமைக்கு அமைய உபுல் சாந்த சன்னஸ்கலவை கைது செய்துள்ளனர்.
முன்னதாக, காவல்துறை அழைத்து, கிரிமினல் நம்பிக்கை மீறல் குற்றச்சாட்டு பதிவு செய்யப்படலாம் என்பதால், இந்தத் தொகையை விரைவில் செலுத்துமாறு காவல்துறை தெளிவாக எச்சரித்திருந்தது. ஆனால் தொடர்ந்தும் பணத்தை செலுத்த தவறிய நிலையில் சன்னஸ்கல கந்தானை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பிந்திய செய்தி
கந்தானை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட உபுல் சாந்த சன்னஸ்கல பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
அவர் இன்று (ஏப்ரல் 25) பிற்பகல் வெலிசர நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து , அவரை 5 இலட்சம் ரூபா பிணையில் விடுவிக்குமாறு வெலிசர நீதவான் தம்மிக்க உடுவிதான உத்தரவிட்டுள்ளார்.