“பொலிசார் , குற்றவாளிகள் மீது துப்பாக்கி பிரயோகம் செய்ய பயப்பட தேவையில்லை”: அமைச்சர் டிரான்.

குற்றவாளிகளின் ஒழிப்பது பாவம் அல்ல, காவல்துறை அதிகாரிகள் தங்கள் துப்பாக்கிகளைப் பயன்படுத்த பயப்பட வேண்டாம் என்று பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.

“இந்த நாட்டிலிருந்து குற்றவாளிகளை ஒழிப்பது பாவம் அல்ல. உங்கள் கையில் இருக்கும் ஆயுதத்தைப் பயன்படுத்த பயப்பட வேண்டாம்.

இன்று (ஏப்ரல் 25) களுத்துறை, கட்டுகுருந்தவில் விஷேட அதிரடிப்படையின் விரைவு வரிசைப்படுத்தல் மோட்டார் சைக்கிள் பாடநெறியை நிறைவு செய்த பொலிஸ் உத்தியோகத்தர்களின் அணிவகுப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

நீதி நடவடிக்கையுடன், மக்களைச் சுட்டுக் கொன்றுவிட்டுத் தப்பிச் செல்லும் துப்பாக்கிதாரிகளை துரத்திச் சென்று கைது செய்யும் நோக்கில் இந்த மோட்டார் சைக்கிள் குழு பயிற்சி பெற்றுள்ளது.

அந்த பயிற்சியை படித்த சிறப்பு மோட்டார் சைக்கிள் ஓட்டுனர்கள் 100 பேர் பயற்சியை நிறைவு செய்த பின்னர் வெளியேறுகின்றனர்.

இந்த மோட்டார் சைக்கிள் பொலீசார் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவிற்கு நியமிக்கப்பட்டுள்ளதுடன், மேல் மற்றும் தென் மாகாணங்களின் கீழ் இயங்கும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்களுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

“உங்களுக்கு எது சரியானதோ அதை நாங்கள் ஆதரிக்கிறோம். நான் இங்கு அதிகம் பேச வேண்டியதில்லை. இங்குள்ளவர்களுக்கு என்ன செய்வது என தெரியும்? இந்த குழு போதவில்லை என்றால் மற்றொரு போலீஸ் மோட்டார் சைக்கிள் குழு அமைக்கப்படும். எங்களுக்கு ஒரு இலக்கு உள்ளது. அந்த இலக்கு என்ன என்பது அனைத்து காவல்துறை அதிகாரிகளுக்கும் தெரியும். நான் அந்த இலக்கை நோக்கி செல்லவே விரும்புகிறேன்.

நீங்கள் இலக்கை நோக்கி செல்வீர்கள் என்று மட்டுமே எதிர்பார்க்கிறேன். போதைப்பொருள் விற்பனை செய்பவர்களை, பாதாள உலகத்தில் ஈடுபடுபவர்களை, இந்த நாட்டிலிருந்து அழிப்பது பாவம் அல்ல. எனவே நீங்கள் உங்கள் இலக்கை நோக்கிச் செல்லுங்கள். பொலிஸ் மா அதிபரின் வழிகாட்டுதலின் கீழ் இந்தப் பணியை முன்னெடுத்து இந்த நாட்டை நல்லதொரு இடத்திற்கு கொண்டு செல்வோம்.” என்றார் அமைச்சர்.

Leave A Reply

Your email address will not be published.