சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதிநிதிகள் எதிர்க்கட்சித் தலைவரை சந்தித்தனர்.
சீன கம்யூனிஸ்ட் கட்சியின் சர்வதேச உறவுகள் திணைக்களத்தின் தலைவர்கள் குழு எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் ஐக்கிய மக்கள் கூட்டணியின் பிரதிநிதிகளை சந்தித்தது.
அந்த கலந்துரையாடலுக்கு மேலதிகமாக, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிற்கும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் சர்வதேச திணைக்களத்தின் மத்திய குழுவின் பிரதி அமைச்சர் சன் ஹையனுக்கும் இடையில் கலந்துரையாடலும் இடம்பெற்றது.
இங்கு பொருளாதார, வர்த்தக, வர்த்தக மற்றும் அரசியல் உறவுகளின் பல பகுதிகள் குறித்தும் விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன், இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான வர்த்தக உறவுகளை கட்டியெழுப்புவது தொடர்பாக இரு தரப்பினருக்கும் இடையில் கருத்துக்கள் பரிமாறப்பட்டன.
இலங்கையில் சீனாவின் பொருளாதார அபிவிருத்தி மாதிரியை மாற்றியமைத்து நாட்டை தற்போதைய நிலையில் இருந்து மீட்டெடுக்கும் முறை தொடர்பிலும் இரு தரப்பினருக்கும் இடையில் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க ஒரு மில்லியன் அமெரிக்க டொலர்களை முதலீடு செய்ய எதிர்பார்ப்பதாக சீன கம்யூனிஸ்ட் கட்சியின் சர்வதேச உறவுகள் திணைக்களத்தின் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
நுண், சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகர்கள் மற்றும் தொழில் முயற்சியாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தூதுக்குழுவினரிடம் தெரிவித்தார்.