26 இலட்சம் பண மோசடி காரணமாக கொக்குவில் புகையிரத நிலையத்துக்கு சீல்!
கொக்குவில் புகையிரத நிலையத்தில் கடமையாற்றிய நிலைய பொறுப்பதிகாரி , டிக்கட்களை விற்ற பணத்தின் லாபத்தில் 26 லட்சம் ரூபாய் பணத்தை மோசடி செய்துள்ளமை தெரிய வந்ததையடுத்து , நேற்று (25) கொக்குவில் புகையிரத நிலையத்திற்கு அதிகாரிகளால் சீல் வைக்கப்பட்டுள்ளது.
கொக்குவில் புகையிரத நிலையத்தின் நிலைய பொறுப்பதிகாரி பணத்தை மோசடி செய்துள்ளதாக யாழ் புகையிரத அதிகாரிகள் பொலிஸில் முறைப்பாடு செய்திருந்ததுடன் இந்த மோசடி தொடர்பில் புகையிரத திணைக்களமும் தனியான விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
கொக்குவில் நிலைய அதிபரின் சேவையை தற்காலிகமாக இடைநிறுத்திய புகையிரத அதிகாரிகள் இது தொடர்பில் பொலிஸாருக்கு முறைப்பாடு ஒன்றையும் அனுப்பி வைத்துள்ளனர்.
கொக்குவில் புகையிரத நிலையத்திற்கு சீல் வைத்த புகையிரத புலனாய்வு அதிகாரிகள், பயணிகளுக்கு தேவையான புகையிரத பயணச்சீட்டுகளை , யாழ் புகையிரத நிலையத்தில் பெற்றுக்கொள்ளுமாறு கொக்குவில் புகையிரத நிலையத்தில் அறிவித்தல் ஒன்றை ஒட்டியுள்ளனர்.