மத்தளை விமான நிலையம் , இந்தியா மற்றும் ரஷ்யாவுக்கு…

மத்தளை விமான நிலையத்தின் நிர்வாகத்தை இந்திய மற்றும் ரஷ்ய நிறுவனங்களுக்கு வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அதன்படி, இந்த விமான நிலையத்தின் நிர்வாகம் முப்பது ஆண்டுகளுக்கு அந்தந்த இரண்டு நிறுவனங்களுக்கு மாற்றப்பட உள்ளது.
இந்த விமான நிலையத்திற்கு ஐந்து நிறுவனங்கள் ஏலம் சமர்ப்பித்திருந்த நிலையில், இந்த இரண்டு நிறுவனங்களுமே தேர்வு செய்யப்பட்டுள்ளன.
இது தொடர்பான அமைச்சரவைப் பத்திரம், அமைச்சர் நிமல் சிறிபாலத சில்வாவினால் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டது.