பழங்காலத்து நாணய குற்றிகள் கண்டுபிடிக்கப்பட்ட இடத்திற்கு சாள்ஸ் விஜயம்.
பழங்காலத்து நாணய குற்றிகள் கண்டுபிடிக்கப்பட்ட இடத்திற்கு சாள்ஸ் பாராளுமன்ற உறுப்பினர் விஐயம்
மன்னார் நானாட்டான் வடக்கு வீதி என்னும் இடத்தில் மீன் மற்றும் வாள் சின்னங்கள் பொறிக்கப்பட்ட எண்ணிக்கையில் 1904 நாணயக் குற்றிகள் சட்டி பாணை ஓட்டுத் துண்டுகளும் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டு முருங்கன் பொலிஸ் நிலையத்தில் குறித்த நாணயக் குற்றிகள் ஒப்படைக்கப்பட்டிருந்தது.
இன்றைய தினம் குறித்த பகுதிக்கு பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் விஐயம் செய்ததுடன் அவ் இடத்திற்கு வருகைதந்த சிரேஸ்ட பேராசிரியர் ப.புஷ்பரட்ணம் யாழ்ப்பாண பல்கலைக்கழகம், ப.கபிலன் யாழ்ப்பாண கோட்டை புனர்நிர்மான உத்தியோகத்தர், வி.மணிமாறன் யாழ் கோட்டை அகழ்வாய்வு உத்தியோகத்தர், தொல்லியல்துறை மாணவர்கள் ச.தசிந்தன், க.கிரிகரன் ஆகியோருடன் கலந்துரையாடியதுடன் எமது வரலாற்று சின்னங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் அத்துடன் இவ் நாணயக்குற்றிகள் வரலாற்று நூல்களின் படி மீன் மற்றும் வாள் சின்னங்கள் பாண்டிய மன்னர்களுடைய முடியாட்சிக்கு உரியவையாக அறிய முடிகிறது எனவும் குறிப்பிட்டதுடன் இது தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.இச் சந்திப்பில் நானாட்டான் பிரதேச சபை உப தவிசாளர் உடனிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.