வாகன எண் பலகைகளில் இருந்து மாகாண எழுத்துக்கள் அகற்றப்படவுள்ளன.
வாகனங்களில் மாகாணத்தை அடையாளப்படுத்தும் தற்போதுள்ள இரண்டு ஆங்கில எழுத்துக்களை நீக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தனவினால் மோட்டார் போக்குவரத்து திணைக்களத்திற்கு வழங்கப்பட்டுள்ள பணிப்புரையின் அடிப்படையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
திணைக்களத்தின் படி, புதிய உரிமையாளர்கள் எதிர்கால வாகன விற்பனையில் மாகாணத்தைக் குறிக்கும் இலக்கத் தகடுகளை மாற்ற வேண்டிய அவசியமில்லை.