லக்னோஅணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி.

கேப்டன் சாம்சன், துருவ் ஜுரெல் அரைசதம் விளாச ராஜஸ்தான் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

லக்னோவில் நடந்த ஐ.பி.எல்., லீக் போட்டியில் ராஜஸ்தான், லக்னோ அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற ராஜஸ்தான் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் ‘பீல்டிங்’ தேர்வு செய்தார்.

லக்னோ அணிக்கு குயின்டன் டி காக் (8), ஸ்டாய்னிஸ் (0) ஏமாற்றினர். பின் கேப்டன் ராகுல், தீபக் ஹூடா சேர்ந்து அணியை மீட்டனர். அவேஷ் கான் வீசிய 8வது ஓவரில் 2 சிக்சர், ஒரு பவுண்டரி உட்பட 21 ரன் விளாசிய ராகுல், சகால் பந்தை பவுண்டரிக்கு அனுப்பி அரைசதம் கடந்தார். பவுல்ட் வீசிய 11வது ஓவரில் 2 பவுண்டரி விரட்டிய ஹூடா, 30 பந்தில் அரைசதம் எட்டினார். மூன்றாவது விக்கெட்டுக்கு 115 ரன் சேர்த்த போது அஷ்வின் ‘சுழலில்’ ஹூடா (50) சிக்கினார். பூரன் (11) நிலைக்கவில்லை. அவேஷ் பந்தில் ராகுல் (76) அவுட்டானார்.

லக்னோ அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 196 ரன் எடுத்தது. படோனி (18), குர்னால் (15) அவுட்டாகாமல் இருந்தனர்.

சவாலான இலக்கை விரட்டிய ராஜஸ்தான் அணிக்கு பட்லர் (34), ஜெய்ஸ்வால் (24) ஜோடி நல்ல துவக்கம் கொடுத்தது. ரியான் பராக் (14) நிலைக்கவில்லை. பின் இணைந்த கேப்டன் சஞ்சு சாம்சன், துருஜ் ஜுரெல் அரைசதம் விளாசினர். யாஷ் தாகூர் வீசிய 19வது ஓவரில் வரிசையாக ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர் விளாசிய ‘ஹீரோ’ சாம்சன் வெற்றியை உறுதி செய்தார்.ராஜஸ்தான் அணி 19 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 199 ரன் எடுத்து வெற்றி பெற்றது. எட்டாவது வெற்றியை பதிவு செய்த ராஜஸ்தான் அணியின் ‘பிளே-ஆப்’ வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

Leave A Reply

Your email address will not be published.