குற்றம் எதுவும் செய்யாத நான் எந்தவொரு நாட்டுக்கும் தப்பியோடவேமாட்டேன்! – மைத்திரி இப்படி விளக்கம்.

“நான் தென்கொரியாவுக்குத் தப்பிச் செல்லவுள்ளேன் என்று வெளியாகியுள்ள செய்திகள் பொய்யானவை. குற்றம் எதுவும் செய்யாத நான் தென்கொரியாவுக்கோ அல்லது உலகின் வேறு எந்த நாடுகளுக்கோ தப்பிச் செல்ல வேண்டிய அவசியம் இல்லை.”

இவ்வாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று தெரிவித்தார்.

இலங்கையில் கடும் அரசியல் நெருக்கடிகளையும், வழக்குகளையும் எதிர்கொண்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தென்கொரியாவுக்குத் தப்பிச் சென்று அங்கு தஞ்சமடைய உத்தேசித்துள்ளார் என்று சில ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. அந்தச் செய்திகளை மறுதலித்து இன்று கருத்துத் தெரிவிக்கும்போதே மைத்திரி மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

“அரசியல் எதிரிகளால் மேற்கொள்ளப்படும் இவ்வாறான பொய்ப் பிரசாரங்களை நான் வன்மையான கண்டனங்களுடன் அடியோடு நிராகரிகின்றேன்.

நீதிமன்றத்தின் தடை உத்தரவு இருப்பதால், கம்பஹா மாநகர சபையில் சர்வதேச தொழிலாளர் தினத்தை வெற்றிகரமாக நடத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் கட்சியின் அங்கீகரிக்கப்பட்ட அதிகாரிகள் ஏற்கனவே ஏற்பாடு செய்துள்ளனர்.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.