அன்று கோட்டாவுக்கு இருந்த அலை இன்று திசைகாட்டிக்கு..- அனுர.
தேசிய மக்கள் சக்திக்கு , அரசாங்க அதிகாரம் வழங்கப்படுவதை தடுப்பதற்காக அனைத்து பகை கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்படுவதாக அதன் தேசிய மக்கள் சக்தி தலைவர் அனுர திஸாநாயக்க சுவீடனில் வைத்து தெரிவித்துள்ளார்.
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபய ராஜபக்சவை ஆட்சிக்குக் கொண்டுவருவதற்கு வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களே பெரும் பங்காற்றியதாகத் தெரிவித்த அவர், தற்போது அந்த குழுக்களின் பிரதான தெரிவாக தேசிய மக்கள் சக்தி மாறியுள்ளதாகவும் தெரிவித்தார்.
இலங்கையின் முறைமையில் மாற்றம் ஏற்படும் என்ற நம்பிக்கையில் வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருவதாகவும், அந்த மாற்றத்தை ஏற்படுத்த தேசிய மக்கள் சக்தியை தெரிவு செய்துள்ளதாகவும் திஸாநாயக்க தெரிவித்தார்.
ஸ்வீடனின் ஸ்டோக்ஹோமில் நடைபெற்ற கட்சியின் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கோட்டாபய ராஜபக்சவை ஆட்சிக்கு கொண்டு வருவதற்கு வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்கள் பெரும் பங்காற்றியதாகவும், மக்களின் எதிர்பார்ப்புகளை தகர்த்து கோட்டாபய வீட்டிற்கு செல்ல வேண்டும் என்ற பொதுக் கருத்தையும் உருவாக்க பாடுபட்டதாகவும் அவர் கூறினார்.