வெள்ளியங்கிரி மலையேறிய பக்தர் திடீர் மரணம்; 3 மாதத்தில் 9 பேர் உயிரிழப்பு – பரபரப்பு!
வெள்ளியங்கிரி மலை ஏற்றத்தின்போது மூச்சுதிணறல் ஏற்பட்டு பக்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கோவையில், தென்கைலாயம் என அழைக்கப்படும் வெள்ளியங்கிரி கோவில் அமைந்து உள்ளது. 7 மலைகளை தாண்டி சிவலிங்கத்தை தரிசிக்க லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை புரிவது வழக்கம்.
கடந்த பிப்ரவரி மாதம் முதல் மே மாதம் வரை பக்தர்கள் மலை ஏற அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், திருவள்ளூர் மீஞ்சூர் கிராமத்தை சேர்ந்த புண்ணியகோடி (46) என்பவருடன் அவர்களது நண்பர்கள் 10 பேர் அடிவாரத்தில் தரிசனம் முடித்து பூண்டி மலை ஏற தொடங்கியுள்ளார்.
இதில் ஒன்றாவது மழை ஏறும் போது திடீரென புண்ணியகோடிக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு மயக்கம் அடைந்துள்ளார். உடனே கீழே அழைத்து வந்து 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளார். இதனையடுத்து வழக்குப்பதிவு செய்த போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முன்னதாக இந்தாண்டு மட்டும் வெள்ளிங்கிரி மலை ஏறிய பக்தர்கள் ஒன்பது பேர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலதிக செய்திகள்
நடிகை சோனா ஹைடனின் ‘ஸ்மோக்’ வெப் சீரிஸ்.
மாணவியை வீட்டிற்கு அழைத்துச் சென்ற பிரதான பாடசாலை ஒன்றின் ஆசிரியர் கைது.
பொதுமக்களுக்கு மரண தண்டனை வழங்க ஜேவிபிக்கு என்ன அதிகாரம் இருந்தது? – சுகிஸ்வர பண்டார.
அன்று கோட்டாவுக்கு இருந்த அலை இன்று திசைகாட்டிக்கு..- அனுர.
SJB முழுக் கட்சியும் ரணிலுக்கு ஆதரவளிக்க வேண்டும்’ என எம்.பி.க்கள் குழு பரிந்துரை!