நாயாறு கடலில் மூழ்கி கொடிகாமம் வாசி மாயம்!

முல்லைத்தீவு, நாயாறு கடலில் குளிக்கச் சென்ற 5 பேரில் கொடிகாமத்தைச் சேர்ந்த 40 வயதுடைய ஒருவர் நீரில் இழுத்துச் செல்லப்பட்டு காணாமல்போயுள்ளார்.
5 பேர் நேற்று மாலை கடலில் குளித்துக்கொண்டிருந்தபோது ஒருவர் நீரில் இழுத்துச் செல்லப்பட்டுள்ளார். அவரைக் காப்பாற்ற முயன்றவரும் நீரில் மூழ்கியுள்ளார். இருப்பினும் கடற்படையினரின் உதவியுடன் அவர் உயிருடன் மீட்கப்பட்டு முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
காணாமல்போனவரைத் தேடும் பணி முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.