இலங்கைக்கு கொண்டு வரப்பட இருந்த போதைப்பொருள் கடலில் சிக்கியது.. பெறுமதி 21 பில்லியன்..
சந்தேகத்திற்கிடமான நிலையில் இலங்கைக்கு கொண்டு செல்லப்பட்டுக் கொண்டிருந்த போதைப்பொருள் சரக்குகளுடன் மீனவர் படகொன்றை இந்திய கடலோர காவல்படையினர் கைது செய்துள்ளனர்.
அதில் 86 கிலோ போதைப்பொருள் இருந்ததாகவும், அதன் மதிப்பு சுமார் 600 கோடி இந்திய ரூபாய் என்றும் கூறப்படுகிறது.
பாகிஸ்தானில் இருந்து வந்து கொண்டிருந்த இந்த படகு 14 பணியாளர்களுடன் கைது செய்யப்பட்டது.