என்னுடன் விவாதத்திற்கு வந்தவர்கள் மூளை முதிர்ச்சியடையாதவர்கள் : நளின் ஹேவகே
எனது கருத்தை முழுமையாக பேசி முடிக்க இடமளிக்காமல், அண்மையில் தொலைக்காட்சி அரசியல் நிகழ்ச்சி ஒன்றில் இரண்டு மொட்டு சபை உறுப்பினர்கள் தம்மை அவமானப்படுத்தியதாக தேசிய மக்கள் சக்தியின் தேசிய செயற்குழு உறுப்பினரும் , முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான நளின் ஹேவகே தெரிவித்துள்ளார்.
முழுமையான உரையாடலை மேற்கொள்ள முடியாத முதிர்ச்சியடையாத இரண்டு எம்.பி.க்களை தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் வரவழைத்து தேசிய மக்கள் சக்தியை அவமதிப்பதைத் தவிர அவர்களது செயலற்ற அதிகாரத் திட்டத்தில் வேறு எதுவும் இல்லை எனவும் ஹேவகே குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக சமீபத்தில் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பாதியிலேயே என் கருத்தை தெரிவித்துக் கொண்டிருந்த போது, என்னை முழுமையாக முடிக்க விடாமல் பல்வேறு விடயங்களைக் கூறி நடுவில் இடையூறு செய்தனர். அந்தக் காலத்தில் நம் நாட்டில் பல கொலைகள் நடந்தன. கருப்பு பூனைகள் மற்றும் மஞ்சள் பூனைகள் என பல்வேறு அமைப்புகள் இருந்தன.
மேலும் தனிப்பட்ட பழிவாங்கும் கொலைகள் நடந்தன. அந்த சூழ்நிலையில் பல செயல்கள் அன்று நடந்தன. அப்படி ஒன்றைப் பிடித்துக்கொண்டு தான் தேசிய மக்கள் சக்தி மீது அவதூறு பரப்பப்படுகிறது. அது அவர்களின் குழந்தைப் பருவம். முறையான உரையாடல் மற்றும் விரிவான விவாதம் நடத்த முடியாத வயது குறைந்தகளால் இதற்கு மேல் எதுவும் செய்ய முடியாது என்பது எங்களுக்கு மட்டுமல்ல, முழு நாட்டிற்கும் தெரியும் என நளின் ஹேவகே தெரிவித்துள்ளார்.