மேதின பாதுகாப்பு கடமைகளுக்கு 9000 பொலிஸார்.
மே தின அணிவகுப்பு மற்றும் மே தின பேரணிகளுக்காக நாடளாவிய ரீதியில் இருந்து 9000 இற்கும் அதிகமான பொலிஸ் உத்தியோகத்தர்கள் நாளை (01) ஈடுபடுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
உலக தொழிலாளர் தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் 40 மே பேரணிகளும் கொழும்பில் 14 மே பேரணிகளும் நடத்தப்படவுள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர் குறிப்பிடுகின்றார்.
கொழும்பில் நடைபெறும் மே தினக் கொண்டாட்டத்துக்காக சுமார் 2100 பொலிஸ் உத்தியோகத்தர்களும் போக்குவரத்து கடமைகளுக்காக 1300 உத்தியோகத்தர்களும் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.