வாகனங்கள் 12 ஆண்டுகளுக்கு மேல் பழையவை.. புதிய வாகனங்கள் தேவை..- எம்.பி.க்கள் பலரின் ஆதங்கம்..
வரியில்லா வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதிக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் பலர் சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக சபாநாயகர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இதன்படி, ஆளும்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கையெழுத்திட்ட கடிதம் ஒன்று சபாநாயகருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்த கோரிக்கையை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் முன்வைக்க உள்ளதாக அலுவலகம் தெரிவித்துள்ளது.
10 வருடங்களாக பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதிக்கவில்லை என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன மேலும் தெரிவிக்கையில், 12 வருடங்களுக்கு மேற்பட்ட வாகனங்களையே பலர் பயன்படுத்துகின்றனர் என்றார்.