தலவாக்கலையில் திகாவின் மே தினக் கூட்டம்! – சஜித்தும் பங்கேற்பு.

தொழிலாளர் தேசிய சங்கத்தின் மே தினக் கூட்டம் தலவாக்கலை நகர சபை மைதானத்தில் இன்று நடைபெற்றது.

தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் விசேட அதிதியாக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாஸ கலந்துக்கொண்டார்.

இந்நிகழ்வில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ஜூன ரணதுங்க, தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதித் தலைவரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மயில்வாகனம் உதயகுமார், தொழிலாளர் தேசிய சங்கத்தின் முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர்களான சோ.ஸ்ரீதரன், சரஸ்வதி சிவகுரு, பிரதேச சபை உறுப்பினர்கள், கட்சியின் முக்கியஸ்தர்கள் உட்படப் பலர் கலந்துகொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.