சடங்குகளோடு செய்யாத திருமணம் செல்லாதா? உச்சநீதிமன்றம் முக்கிய தீர்ப்பு!

சடங்குகளோடு திருமணம் செய்யப்படாவிட்டால் செல்லாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

உத்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த தம்பதியினர் தங்களது திருமணம் செல்லாது என அறிவிக்க உச்சநீதிமன்றத்தை நாடினர்.

மேலும், இந்து திருமண சடங்குகள் எதுவும் நடைபெறவில்லை எனவும் திருமண சான்றிதழ் பெற வேண்டி சிறிய விழா ஏற்பாடு செய்து உத்திரப் பிரதேச சட்டப்படி சான்றிதழ் பெற்றோம் எனவும் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக, இந்து திருமண சட்டங்களின் படி நடத்தப்படாத திருமணங்கள் குறித்தும், அதனை ஒழுங்குபடுத்த கோரியும் பொதுநல மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இந்த வழக்குகள் குறித்த விசாரணை நடத்தப்பட்டு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன.

அதன்படி, இந்து திருமணத்தில் அக்னி சாட்சியாக நடைமுறையில் இருக்கும் சடங்குகள் கொண்டு திருமணம் நடைபெற வேண்டும். இந்து திருமணம் சட்டம் பிரிவு 5இன் படி, திருமண விழா நடைபெற வேண்டும். பிரிவு 7இன் படி இந்த சடங்குகள் நடைபெறவில்லை என்றால் திருமணம் செல்லாது.

பிரிவு 8இன் படி இந்துமுறைப்படி சான்றிதழ் பெறுவது எளிது. அக்னி சாட்சி போன்ற இந்து சடங்குகளின்படி ஒரு இந்து திருமணம் செய்யப்படாவிட்டால், அந்த திருமணம் இந்து திருமணமாக கருதப்படாது. எந்த மதமாக இருந்தாலும், இல்லாவிட்டாலும் உரிய திருமண விதிகளை பின்பற்றாமல்,

ஒரு ஆணும் பெண்ணும் ஒருவருக்கொருவர் கணவன்-மனைவி என்ற அந்தஸ்தைப் பெற முடியாது. ஆண் பெண் என இருவரும், கணவன் – மனைவி என்ற அந்தஸ்தைப் பெற வேண்டும் என்றால், திருமண சட்ட விதிகளின் கீழ் செல்லுபடியாகும்படி திருமணவிழாவை நடத்த வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.

மேலதிக செய்திகள்

லக்னோ அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை அணியை வீழ்த்தியது.

ஐசியூவில் செல்போன், நகைகள் பயன்படுத்தக் கூடாது: மத்திய அரசு உத்தரவு

ஏற்காடு தனியார் பேருந்து விபத்து: பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு

2007க்கு முன் பிறந்தவர்கள் பெயர்கள் , வாக்காளர் பட்டியலில் இருக்கிறதா?

தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளம் ரூபா 1700 வரை அதிகரிக்கப்படும் – ரணில்.

குழந்தைகளுக்கு உடல் ரீதியான தண்டனை வழங்குவது சட்டப்படி குற்றம் : மீறுவோர் தண்டிக்கப்படுவர்.

சிமெண்ட் விலை குறைக்கிறது – புதிய விலை.

தலவாக்கலையில் திகாவின் மே தினக் கூட்டம்! – சஜித்தும் பங்கேற்பு.

5 வயது மகளைக் கொன்றவருக்கு 34½ ஆண்டுகள் சிறை, 12 பிரம்படி.

Leave A Reply

Your email address will not be published.