கின்னஸ் சாதனையைப் படைக்க அனைவரும் தலைதெறிக்க ஓடிய போது , நான் பொறுப்பெற்றேன் – ரணில் விக்கிரமசிங்க

நாட்டிற்கும் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் இலங்கைக்கும் நல்ல நேரம் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

மாளிகாவத்தை பி.டி.சிறிசேன விளையாட்டரங்கிற்கு அருகில் இன்று (01) நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் மே தினக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

“இன்று நான் உங்களுக்கு ஒரு இரகசியத்தைச் சொல்கிறேன், பிரதமர் டி.எஸ்.சேனநாயக்கா செப்டம்பர் 9ஆம் திகதி ஐக்கிய தேசியக் கட்சியை உருவாக்க சிறந்த சுபநேரத்தை தேடினார். இலங்கைக்கு சுதந்திரம் கிடைக்க நீண்ட காலம் பிடித்தது. எனவே இவ்விரண்டையும் நினைவில் வையுங்கள், நாட்டிற்கும், ஐக்கிய தேசியக் கட்சிக்கும் அதனால்தான் சிறந்த சுபதினம்.

நாடு வீழ்ந்தபோது, ​​எதிர்க்கட்சித் தலைவர் மட்டுமல்ல, ஒவ்வொரு கட்சியினரும் ஓடி கின்னஸ் சாதனை படைக்க முயன்றார்கள். ஆனால் நான் ஓரே ஒரு எம்பி. கட்சியின் தலைவர். பிரச்சனை வந்தால் நாங்கள் ஓட மாட்டோம்” என ஜனாதிபதி தெரிவித்தார்.

வலுவான ஏற்றுமதி பொருளாதாரத்தை உருவாக்கி நாட்டின் இளைஞர்களுக்கு நல்ல எதிர்காலத்தை வழங்கும் திட்டத்தை முன்வைப்பேன் என்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் மே தின பேரணியில் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, சிரமத்துடன் பாதுகாக்கப்பட்ட நாட்டின் பொருளாதாரத்தை மேலும் கட்டியெழுப்புவதற்கு மக்களைப் பற்றி சிந்தித்து அரசாங்கத்துடன் இணக்கப்பாட்டுக்கு வருமாறு ஐக்கிய மக்கள் சக்தி , ஜனதா விமுக்தி பெரமுன உள்ளிட்ட அனைத்து தரப்பினருக்கும் அழைப்பு விடுப்பதாக தெரிவித்தார்.

காப்பாற்றப்பட்ட பொருளாதாரத்தை அழிப்பதற்கான தீர்மானங்கள் எடுக்கப்பட்டால், மீண்டும் நாடு எரிபொருள் வரிசையை ஏற்படுத்தும் , ஒரு இருண்ட யுகத்திற்கு செல்லும் என ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.