தெற்கு மற்றும் வடமேற்கில் புதிய ஆளுநர்கள் நியமனம்!

தென் மாகாணத்திற்கும் வடமேல் மாகாணத்திற்கும் இரண்டு புதிய ஆளுநர்களை ஜனாதிபதி இன்று நியமித்துள்ளார்.
தென் மாகாணத்தின் புதிய ஆளுநராக முன்னாள் இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன மற்றும் வடமேல் மாகாணத்தின் புதிய ஆளுநராக முன்னாள் அமைச்சர் நசீர் அஹமட் ஆகியோர் இன்று காலை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டனர்.