அநுரகுமாரவையும் நேரில் சந்தித்த நோர்வே தூதுவர்!

தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்கவுக்கும் இலங்கைக்கான நோர்வே தூதுவர் மே எலின் ஸ்டெனருக்கும் இடையிலான சந்திப்பு ஜே.வி.பி. தலைமையகத்தில் நேற்று (02) நடைபெற்றது.
இந்தச் சந்திப்பில் நோர்வே தூதரகத்தின் இரண்டாவது செயலாளரான ஜோன் பிஜேர்கெம், தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான கலாநிதி ஹரினி அமரசூரிய, விஜித ஹேரத் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
இதன்போது, நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடி தொடர்பிலும், அரசியல் ரீதியிலான பிரச்சினைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டன.
நோர்வே அரசால் இலங்கைக்கு வழங்கப்படவுள்ள உதவிகள் மற்றும் இரு நாடுகளுக்கிடையிலான உறவை வலுப்படுத்தலின் அவசியம் தொடர்பிலும் பேசப்பட்டன.