திடீரென கோடீஸ்வரரான மன்னார் தொழிலதிபரின் 10 கோடி சொத்து பறிமுதல்….போதைப்பொருள் வியாபாரி என போலீசார் சந்தேகம்!

போதைப்பொருள் கடத்தல் மூலம் சம்பாதித்ததாக சந்தேகிக்கப்படும் மன்னாரில் உள்ள வர்த்தகர் ஒருவரின் சொத்துக்கள் மன்னார் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் நேற்று (02) பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

வன்னி மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சமந்த விஜேசேகரவின் ஆலோசனையின் பேரில் மன்னார் மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் சந்திரபாலவின் மேற்பார்வையில் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால் நீண்டகாலமாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னர் குறித்த சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

பொலிஸாரும் மன்னார் நீதவானும் குறித்த வர்த்தகரின் வீட்டிற்குச் சென்று சொத்துக்களை அபகரிக்குமாறு உத்தரவு பிறப்பித்ததுடன், அபகரிக்கப்பட்ட சொத்துக்களில் பெரிய வீடு, பல வாகனங்கள், மீன்பிடி படகுகள் மற்றும் பல சொத்துக்கள் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

1990ஆம் ஆண்டு அரசினால் கிடைத்த வீட்டில் வசித்து வந்த இவர், வாடகைக்கு எடுக்கப்பட்ட மீன்பிடி படகின் உதவியுடன் மீன்பிடி தொழிலை செய்து பின்னர் மீன் விற்பனை மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இந்த ஆண்டு ஜனவரி மாதம் வரை அவரது மொத்த சொத்துக்கள் பதினைந்து கோடியைத் தாண்டியுள்ளதாகத் தெரியவந்துள்ளது, அதன்பின் அவரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வந்துள்ளனர்.

மன்னார் நீதிமன்றத்தில் இருந்து கிடைக்கப்பெற்ற நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் குறித்த வர்த்தகர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், தொடர்ந்து அவரிடம் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தலைமன்னார் பகுதியில் பங்களா வீட்டில் வசித்து வந்த 43 வயதுடைய வர்த்தகர் கைது செய்யப்பட்டுள்ளார், ஆனால் அவருக்கு மன்னார் மற்றும் பல பிரதேசங்களில் பங்களா வீடுகள் இருப்பதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

மேலதிக செய்திகள்

படுமோசமான ஆட்சிக்கு முடிவு கட்டி மக்கள் சார் அரசை நிறுவுவோம்! – நோர்வே தூதுவரிடம் சஜித் திட்டவட்டம் .

அநுரகுமாரவையும் நேரில் சந்தித்த நோர்வே தூதுவர்!

‘மேதகு’ பட இசையமைப்பாளர் பிரவீன் குமார் 28 வயதில் காலமானார்.

ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் கடைசி பந்தில் தோல்வியடைந்தது ராஜஸ்தான் அணி.

கென்யாவில் தொடர் மழையால் கடந்த 2 மாதங்களில் 181 பேர் பலி.

சீனாவில் மலைப்பாதையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் வாகனங்கள் சரிந்து விழுந்ததில் 24 பேர் உயிரிழந்தனர்.

பாம்பு கடித்த இளைஞரை கங்கை நதியில் கட்டி தொங்கவிடப்பட்ட அவலம்

கோயில் திருவிழாவில் பயங்கர மோதல்; வெடித்த கலவரம்

திடீரென கோடீஸ்வரரான மன்னார் தொழிலதிபரின் 10 கோடி சொத்து பறிமுதல்….போதைப்பொருள் வியாபாரி என போலீசார் சந்தேகம்!

Leave A Reply

Your email address will not be published.