பரீட்சார்த்த புதிய பங்கு என அதிகார பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
மகாறம்பைக்குளம் பரீட்சார்த்த புதிய பங்கு என அதிகார பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
இன்று அதாவது 27.09.2020 ஞாயிற்றுக்கிழமை மன்னார் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்பணி விக்ரர் சோசை அடிகளாரினால் திருப்பலியில் பங்குத்தந்தையாக நியமிக்கப்பட்ட அருட்பணி. மரிய கிளைன் அடிகளாரிடம் பரீட்சார்த்த பங்காக ஆயரால் அறிவிக்கப்பட்ட புதிய பங்கு அதிகார பூர்வமாக ஒப்படைக்கப்பட்டது.
அதேவேளை கடந்த 06. 09.2020 ஞாயிற்றுகிழமை அன்று மகா இறம்பைகுளம் புனித மடு மாதா ஆலயத்தில் நடைபெற்ற சிறப்புத் திருப்பலியின் போது மன்னார் மறைமாவட்டத்தின் வவுனியா மறைக்கோட்டத்தை சேர்ந்த வவுனியா இறம்பைகுளம் புனித அந்தோனியார் ஆலய பங்கின் துணை ஆலயமாகிய மகா இறம்பைகுளம் பரீட்சார்த்த பங்காக மன்னார் மறைாவட்ட ஆயர் மேதகு கலாநிதி இம்மானுவல் பெர்னாண்டோ ஆண்டகை அவர்களின் அனுமதியோடு வவுனியா பங்குத்தந்தை அருட்பணி. M. ஜெயபாலன் அடிகளாரினால் அறிவிக்கப்பட்டது.
இப்பரீட்சார்த்த பங்கின் முதல் பங்குத்தந்தையாக அருட்பணி. மரிய கிளைன் அடிகளார் ஆயரால் நியமிக்கப்பட்டார். பங்கை பொறுப்பேற்கும் முகமாக தனது முதல் திருப்பலியை வவுனியா பங்குத் தந்தையுடன் இணைந்து ஒப்புக்கொடுத்தார். இப்புதிய பங்கின் தாய்க்கோவிலாக மகா இறம்பைகுளம் புனித மடு மாதா ஆலயமும் துணை ஆலயங்களாக அண்ணாநகர் புனித பற்றிமா ஆலயம், இறம்பைவெட்டி புனித ஆனாள் ஆலயம், காத்தர் சின்னக்குளம், ஸ்ரீநகர் என்பன அமைந்துள்ளன. இப்பங்கானது ஏறத்தாழ 175 கத்தோலிக்கக் குடும்பங்களை உள்ளடக்கியது.