இஸ்ரேலுடனான வர்த்தகத்தை நிறுத்தியது துருக்கி!
காசாவில் உள்ள பாலஸ்தீனியர்களுக்கு தடையின்றி மனிதாபிமான உதவி கிடைக்கும் வரை, நிரந்தர போர் நிறுத்தம் உறுதி செய்யப்படும் வரை, இஸ்ரேலுடன் ஆண்டுக்கு 7 பில்லியன் டாலர் மதிப்புள்ள வர்த்தகத்தை துருக்கி மீண்டும் தொடங்காது என துருக்கிய வர்த்தக அமைச்சகம் அறிவித்துள்ளது.
அறிக்கைகளின்படி, துருக்கி அனைத்து தயாரிப்புகளையும் உள்ளடக்கிய வர்த்தக இடைநிறுத்தத்தை விதித்துள்ளது.
அதற்கு பதிலளித்த இஸ்ரேல் வெளிவிவகார அமைச்சர் துருக்கி ஜனாதிபதி ரெசெப் தையிப் எர்டோகன் சர்வாதிகாரியாக செயற்படுவதாக குற்றம் சுமத்தியுள்ளார். துருக்கி மக்கள் மற்றும் வர்த்தகர்களின் தேவைகளை அவர் புறக்கணிப்பதாகவும் சர்வதேச வர்த்தக உடன்படிக்கைகளை புறக்கணிப்பதாகவும் இஸ்ரேல் குறிப்பிட்டுள்ளது.
எவ்வாறாயினும், துருக்கியுடனான வர்த்தகத்திற்கு பதிலாக உள்நாட்டு உற்பத்திகள் மற்றும் பிற நாடுகளின் இறக்குமதிகளில் கவனம் செலுத்துவதற்கு பதிலாக மாற்று வழிகளைக் கண்டறியுமாறு இஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சர் அறிவுறுத்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.