எமது மே தின பேரணி ஒரு லட்சத்தை தாண்டியது : விஜித ஹேரத்.

தேசிய மக்கள் சக்தியினால் நடத்தப்பட்ட மே தின பேரணிகளில் 1 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் கலந்துகொண்டதாக அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
கொழும்பில் மே மாதம் கூட்டத்தை நடத்துவதற்கு போதுமான இடவசதி தமது கட்சிக்கு தற்போது இல்லை என்றும் அவர் கூறுகிறார்.
இதன் காரணமாக நாட்டில் நான்கு இடங்களில் நான்கு மே பேரணிகளை தமது கட்சி நடத்த நேரிட்டதாக அவர் கூறினார்.
இந்த ஆண்டுக்கான மே தினத்தை தமது கட்சி அதிக மக்கள் பங்கேற்புடனும், அமைப்புடனும் நடத்தியதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமது கட்சியை வெற்றிபெறச் செய்ய நாட்டு மக்கள் இப்போதே தயாராக உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.